நகராட்சி, மாநகராட்சிகளில் 1,933 காலிப் பணியிடங்கள்!
தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள்), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தாரர்கள் பிப்.9 முதல் மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1,933 காலியிடங்களுக்கு www.tnmaws.ucanapply.com என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave A Comment