• Login / Register
  • சினிமா

    ப்ளாக்பஸ்டர் வெற்றி; ராயன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

    தனுஷின் 50 வது திரைப்படமாக வெளிவந்திருக்கும் ராயன் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் 75 கோடி ரூபா வசுலை குவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    தனது 50-வது படத்தை தனுஷே இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    கடந்த ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படம் வெளியான 3 நாட்களில் உலக அளவில் ரூ.75.42 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விரைவில் படம் ரூ.100 கோடி வசூலை எட்டும் என தெரிகிறது.

    மேலும் “பிறந்த நாள் பரிசாக ப்ளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி” என தனுஷ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    Leave A Comment