• Login / Register
  • சினிமா

    அவதார் 2 திரைப்படம்: இத்தனை மொழிகளில் வெளியாகிறதா?

    கடந்த 2009ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1,500 கோடி செலவில் உருவான திரைப்படம் தான் அவதார்.

    இந்த திரைப்படம் உலகளவில் 284.72 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதோடு மட்டுமின்றி அவதார் திரைப்படம் 3 ஆஸ்கர்கள் விருதுகளையும் வென்றது.

    இந்த படத்தின் வெற்றியை அடுத்து, அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணியில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் மும்முரமாக இறங்கினார்.

    அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம், கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகுமென அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக அவதார் இரண்டாம் பாக திரைப்படத்தின் வெளியீட்டு தேதி நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப் பெயர் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தி வே ஆஃப் வாட்டர் என பெயரிடப்பட்டுள்ளது.


    இந்த திரைப்படத்தில் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், வின் டீசல் ஆகியோர் இணைவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு உலகளவில் கூடியுள்ளது.

    அவதார் திரைப் படத்தின் முதல் பாகத்தினை விட இரண்டாம் பாகம் மிகுந்த பொருள் செலவில், உலகத் தரம் வாய்ந்த கிராபிக்ஸ் வேலைப்பாடுகளில் உருவாகியுள்ளது.

    அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தின் டீசர் சினிமாகான் திரைப்பட விழாவில் நேற்றைய தினம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தின் 3டி டிரைலர், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் திரைப்படத்துடன் இணைக்கப்பட்டு, வருகின்ற மே 6ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. 


    அவதார் முதல் பாகத்தில் ஜேக் சுல்லியாக சாம் வொர்திங்டனும், நெய்த்ரியாக ஜோ சல்டானா நடித்த கதாபாத்திரங்கள் பெறும் வரவேற்பை பெற்றன. வில்லன் கதாபாத்திரத்தில் ஸ்டீபன் லாங் அற்புதமான நடிப்பை வெளிபடுத்தி இருந்தார். 

    இந்த நிலையில், அவதார் 2 -தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் உலகமெங்கும் வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி, 160 மொழிகளில் வெளியாகவுள்ளது.

    அவதார் 3ஆம் பாகம், 4ஆம் பாகத்தின் வேலைகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


    Leave A Comment