• Login / Register
  • சினிமா

    கோட் படக்குழுவிற்கு அஜித் வாழ்த்து!

    முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில் வெளியாகியுள்ள கோட் திரைப்படக் குழுவிற்கு நடிகர் அஜித் முதலவாது ஆளாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

    2026 சட்டமன்ற தேர்தலை இலக்கு வைத்து தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் கடந்த பெப்ரவரியில் அறிவித்திருந்தார்.

    அண்மையில் கட்சியின் கொடியும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு முதல் அரியல் மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் இன்று (05)திரையரங்குகளில் வெளியாகி உள்ளது

    நடிகர் விஜய்யின் ‘கோட்’ பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினருக்கு அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மோகன், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கோட்’.

    ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார் அஜித்.

    இது குறித்து தனது எக்ஸ் தள பதவில் வெங்கட்பிரபு “நன்றி தல. விஜய் அண்ணாவுக்கு, எனக்கு மற்றும் ‘கோட்’ படக் குழுவினருக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த ஏ.கேவிற்கு நன்றி. நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

    Leave A Comment