தியேட்டருக்குள் வெடித்த ராக்கெட்டுக்கள்: சல்மான் கான் ரசிகர்களால் பரபரப்பு!
‘டைகர் 3’ முதல்நாள் முதல்காட்சியின்போது ரசிகர்கள் தியேட்டருக்குள் ராக்கெட் பட்டாசு விட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சல்மான் கான், கத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் 3’. தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று (நவ.12) உலகம் முழுவதும் வெளியானது.
இப்படத்தின் முதல் காட்சிக்கு நாடு முழுவதும் (தமிழகம் தவிர்த்து) 6 மணிக்கு திரையிடப்பட்டது. சல்மான் கான் ரசிகர்கள் பலரும் அதிகாலை முதலே பட்டாசு வெடித்து நடனமாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிராவின் மாலேகான் நகரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்கள் சிலர் தியேட்டருக்கு உள்ளேயே பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சல்மான் கானின் அறிமுகக் காட்சியின் போது உற்சாக மிகுதியில் ராக்கெட் பட்டாசுகளை வெடித்தனர். அதே போல படத்தில் ஷாருக் கான் ஒரு கேமியோ ரோல் செய்துள்ளார். அவரது காட்சியின்போது ராக்கெட்டுகளை சரமாரியாக பறக்கவிட்டனர் ரசிகர்கள். இதனால் திரையரங்கம் முழுவதும் புகை மண்டலமானது.
ரசிகர்களின் இந்த செயலை பலரும் கண்டித்து வந்தனர். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக மாலேகான் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர்.
Leave A Comment