• Login / Register
  • சினிமா

    இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரபல பாலிவுட் நடிகை!

    இஸ்ரேல் - பலஸ்தீன போர் இடம்பெற்றுவரும் நிலையில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நவோர் கிலானைச் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

    கங்கனா ரணாவத் நடித்து திரைக்கு வரவிருக்கும் படம்  ‘தேஜஸ்’ இதற்கான ப்ரொமோஷன்களுக்காக டெல்லி சென்றிருந்தவர், இஸ்ரேல் தூதரைச் சந்தித்துள்ளார்.



    அது குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ள கங்கனா, “இஸ்ரேல் தூதருடன் மனதுக்கு நிறைவான சந்திப்பு. இஸ்ரேல் மற்றும் இந்தியா உள்பட ஒட்டுமொத்த உலகமும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுப்பட்டுள்ளோம். ராவணனை எரிக்க (தசரா நாள் நிகழ்வு)  நான் டெல்லி சென்றிருந்த போதுn இஸ்ரேல் தூதரகம் சென்று,  இன்றைய ராவணர்களான ஹமாஸை வீழ்த்த போராடுபவர்களைச் சந்திக்க விரும்பினேன். குழந்தைகளும் பெண்களும் இலக்காவது  மனதை நெருடுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் இஸ்ரேல் நிச்சயம் வெல்லும் என நான் நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

    Leave A Comment