தடைகளை கடந்து வசூலில் சாதனை படைத்த லியோ!
பல்வேறு நெருக்கடிகளை கடந்து இன்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக திரையிடப்பட்டு வரும் விஜய் இன் லியோ திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளமை விஜய் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று வெளியாகியுள்ள விஜய் இன் லியோ திரைப்படம் அமெரிக்காவில் ஜெயிலர், துணிவு, ஜவான் படங்கள் வசூலித்ததை விடவும் அதிகமாக வசூல்செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த படம் ஏற்படுத்திய எதிர்ப்பார்ப்பால், படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தமிழ்நாடு மற்றும் உலகளாவிய இடங்களில் உள்ள விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் லியோ திரைப்படத்தை பார்த்து வருகின்றனர்.
லியோ படத்தை அமெரிக்காவில் பிரதியங்கிரா சினிமாஸ் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் முதல் நாளில் மட்டுமே லியோ 1 மில்லியன் டாலர் அளவுக்கு வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.30 கோடி.

இந்த அளவு வசூலை ஷாரூக்கானின் ஜவான், அஜித்தின் துணிவு மற்றும் ரஜினியின் ஜெயிலர் படங்கள் பெறவில்லை.
அமெரிக்காவில் மட்டும் லியோ திரைப்படம் 1000-க்கும் அதிகான இடங்களில் திரையிடப்பட்டுள்ளது.

டிக்கெட்டிற்கு தொடர்ந்து டிமாண்ட் இருப்பதால் லியோ அமெரிக்காவில் வசூலில் புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ரஜினியின் கபாலி திரைப்படம்தான் முதல் நாளில் அமெரிக்காவில் அதிக தொகையை வசூலித்திருந்தது. இதனை லியோ முறியடித்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave A Comment