• Login / Register
  • சினிமா

    பிக் பாஸ் சீசன் 7: அடுத்த எலிமினேஷன் பற்றி வெளியான தகவல்

    விஜய் டீவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 7 இன் அடுத்த எலிமினேஷன் பற்றிய புதிய  தகவல் வெளியாகியுள்ள்ளது. 

    இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், எழுத்தாளர் பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    முதல் வார முடிவில் மக்கள் குறைவாக வாக்களித்த அனன்யா வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, உடல்நிலை மற்றும் மனநிலையைக் கருத்தில் கொண்டு பவா செல்லத்துரை பிக் பாஸ் வீட்டைவிட்டு தாமாக முன்வந்து வெளியேறினார்.

    பவா செல்லத்துரை வெளியேறிய காரணத்தால் இந்த வாரம் பிக்பாஸில் எலிமினேஷன் கிடையாது என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    இந்த வாரம் நாமினேஷனில் ஸ்மால் பாஸ் ஹவுஸில் இருந்து பிரதீப், மாயா, விஷ்ணு ஆகியோரும் பிக்பாஸ் ஹவுஸில் இருந்து அக்‌ஷயா, ஜோவிகா, விசித்திரா, பூர்ணிமா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

     


    Leave A Comment