• Login / Register
  • சினிமா

    பிக் பாஸ் சீசன் 7: முதலாவதாக வெளியேற்றப்பட்ட நபர் இவர்தானாம்..


    அக். 1-ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் வாரம் வெளியேறிய நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    கடந்த சீசன்களை போல் அல்லாமல் இரண்டு வீடுகள், இரண்டு பிக் பாஸ் குரல்கள், இரண்டு நாமினேஷன்கள் என பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

    முதல் வாரத்திலேயே, ரவீனா, ஐஷு, பிரதீப், ஜோவிகா, பவா செல்லத்துரை, யுகேந்திரன் மற்றும் அனன்யா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டு மக்களின் வாக்கெடுப்புக்கு அனுப்பப்பட்டனர்.

    இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் நபராக அனன்யா ரியோ வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




    ரசிகர்கள் மத்தியில் ஓரளவு ஆதரவுள்ள அனன்யா ரியோ வெளியேற்றம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

    Leave A Comment