அடுத்த ஆதி குணசேகரன் யார்..? அறிமுக ப்ரோமோ வெளியானது
நடிகர் மாரிமுத்துவின் இறப்பை தொடர்ந்து அவர் நடித்துவந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி இருந்துவந்த நிலையில் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடிப்பது யார் என்பது இறுதியாகியுள்ளது.
புதிய ஆதி குணசேகரன் அறிமுக காட்சிகள் எதிர்நீச்சல் ப்ரோமோ விடியோவாக வெளியாகியுள்ளது.
இந்த பாத்திரத்தில் நடிகர் இளவரசு நடிக்கிறார். வேல ராமமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பூவிலங்கு மோகன் நடிப்பார் என்றெல்லாம் பேசப்பட்டது. இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடிக்கவுள்ள நபர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆதி குணசேகரன் பாத்திரத்தை நீண்ட நாள்களுக்குப் பிறகு மக்களிடம் காட்டுவதற்கான எதிர்நீச்சல் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
ஆதி குணசேகரன் வெள்ளை வேட்டி சட்டையுடன் அதே கம்பீரத்துடன் காரிலிருந்து இறங்கி தன் வீட்டுக்குள் வருகிறார். ஆனால், அவரின் முகத்தை முன்னோட்ட விடியோவில் காட்டவில்லை. இதனால் எதிர்நீச்சல் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எனினிம், முன்னோட்ட விடியோவின் சில காட்சிகளை வைத்துப் பார்க்கும்போது, ஆதி குணசேகரனாக நடிப்பவர் வேல ராமமூர்த்தி என்பது உறுதியாகியுள்ளது.
Leave A Comment