• Login / Register
  • சினிமா

    இந்தவார டிஆர்பி பட்டியல் வெளியானது..! முதலிடத்தில் எந்த சீரியல் தெரியுமா?

    சின்னத்திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.

    இந்த வார டிஆர்பி பட்டியலின்படி, எதிர் நீச்சல் தொடரின் முக்கிய கதாபாத்திரமாக கருதப்பட்ட மாரிமுத்து மறைவுக்குப் பிறகும் இந்த தொடர் 9.88 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ச்சியாக முதலிடத்தில் உள்ளது.

    கயல் தொடர் 9.61 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பல வாரங்களாக தக்கவைத்து கொண்டுள்ளது.  9.12 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று, தொடர்ந்து 3வது இடத்தில் சுந்தரி தொடர் உள்ளது.

    அதேபோல், வானத்தைப்போல தொடர் 8.95 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 4வது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர்களே முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளது.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் 8.17 டிஆர்பி புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சென்ற வாரம் ஐந்தாம் இடத்தில் இருந்த சன் டிவியின் இனியா தொடர் 8.16 டிஆர்பி புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

    மிஸ்டர் மனைவி தொடர் 7.86 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 7வது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது. பாக்கியலட்சுமி தொடர் 7.65 டிஆர்பி புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. சென்ற வாரம் 10ம் இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 6.70 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 9வது இடத்தில் உள்ளது.

    கடந்த வார பட்டியலில் இல்லாத ஆனந்த ராகம் தொடர் 6.27 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 10வது இடத்தை பெற்றுள்ளது.


    Leave A Comment