• Login / Register
  • சினிமா

    ஆஸ்கருக்கு தேர்வானது டோவினோ தாமஸின் ‘2018’..!

    96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள நிலையில் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரவேற்பை பெற்ற ‘2018’ மலையாள திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்கு அதிகாரபூர்வமாக தேர்வாகியுள்ளது.

    சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவின் போட்டிக்கு மலையாள படமான ‘2018’ அதிகாரபூர்வமாக அனுப்பிவைக்கப்பட உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு  அறிவித்துள்ளது.

    ‘தி கேரளா ஸ்டோரி’, ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’, ‘மிஸ்டர் சாட்டர்ஜி விஎஸ் நார்வே’, ‘பாலகம்’ (தெலுங்கு), ‘ஆகஸ்ட் 16, 1947’, வால்வி (மராத்தி), பாப்லியோக் (மராத்தி) உள்ளிட்ட படங்கள் பரிந்துரைப் பட்டியில் இருந்த நிலையில் ‘2018’ திரைப்படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பினர் தேர்வு செய்துள்ளனர். 

    2018 ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

    நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    இதேவேளை, நடிகர் டோவினோ தாமஸுக்கு சிறந்த ஆசிய நடிகருக்கான செப்திமிஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விருது தனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த விருதை கேரளத்திற்கு சமர்பணம் செய்வதாகவும் டோவினோ தெரிவித்திருக்கிறார்.




    Leave A Comment