• Login / Register
  • சினிமா

    வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

    பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    1955 ஆம் ஆண்டு ’ரோஜுலு மராயி’ என்கிற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வஹீதா ரஹ்மான். அதன்பின், ஹிந்தியில் ‘பைசா’, ‘கைடு’, ‘ககாஸ்ஹே போல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகச்சிறந்த கவனத்தைப் பெற்றார். 

    தமிழில், எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். 

    90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த வஹீதா சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ஒருமுறையும் மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

    இவருக்கு மத்திய அரசு, 1972-ல் பத்ம ஸ்ரீ விருதையும் 2011-ல் பத்ம பூஷண் விருதையும் வழங்கி கௌரவித்தது.

    இன்று இவருக்கு வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தாதா சாகேப் பால்கே விருது வஹீதா ரஹ்மானுக்கு(85) அறிவிக்கப்பட்டுள்ளது.


    Leave A Comment