லியோ படத்தின் இன்றைய அப்டேட் நிறுத்திவைப்பு!
லியோ படத்தின் இன்றைய அப்டேட்டை படக்குழு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே லியோ படத்தின் இன்றைய அப்டேட்டை படக்குழு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இனி தினமும் 30 நாள்களுக்கு லியோ அப்டேட் இருக்குமென விருது விழா ஒன்றில் லோகேஷ் கூறினார். அதன்படி ஞாயிற்றுக்கிழமை லியோ தெலுங்கு போஸ்டரும், திங்கள்கிழமை கன்னட போஸ்டரும் வெளியானது.
தொடர்ந்து, லியோ படத்தின் மலையாள போஸ்டர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.
ஆனால், விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய அப்டேட்டை நாளைக்கு ஒத்திவைப்பதாக லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Leave A Comment