தமிழகம் முழுவதும் ஒருவேளை மதிய உணவு; விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு
உலக பட்டினி தினம் 28 ஆம் திகதி அனுசரிக்கப்படவுள்ளநிலையில், அனறைய தினத்தில் ஒருவேளை மதிய உணவு அளிக்கப்படவுள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பட்டினி தினத்தை முன்னிட்டு ஒரு நாள் (மதிய) உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டடுள்ளது என்று தெரிவித்தார்.

Leave A Comment