வெளியீட்டு தேதியை அறிவித்த "ஜப்பான்" படக்குழு!
நாடுகள் கார்த்தியின் பிறந்ததினமான இன்று நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரீம் வாரியர் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரவிவர்மன் - ஒளிப்பதிவு. பிலோமின் ராஜ்- படத்தொகுப்பு.
இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில், கார்த்தியின் பிறந்த நாளையொட்டி ஜப்பான் கதாபாத்திரத்தின் அறிமுக விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், ஜப்பான் படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave A Comment