• Login / Register
  • சினிமா

    சோழர்களின் ப்ளூ டிக்கை பறித்த எலான் மஸ்க்!

    பொன்னியின் செல்வன் இரண்டாம்பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் மும்மரமாக ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

    திரிஷா மற்றும் ஜெயம்ரவி கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்தின் வெளியீட்டின் போதும்  தங்கள் கதாபாத்திரத்தின் பெயர்களை திரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர் மாற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் புரொமோஷனுக்காக நடிகை திரிஷா மற்றும் ஜெயம் ரவி தங்களது பெயர்களை டுவிட்டரில் குந்தவை மற்றும் அருண்மொழி வர்மன் என்று மாற்றினர். இதைத்தொடர்ந்து அவர்களது ப்ளூ டிக் நீக்கப்பட்டது. 


    திரிஷா மீண்டும் தனது பெயரை ஏற்கனவே இருந்தது போல் மாற்றியிருக்கிறார் ஆனாலும் அவருக்கு ப்ளூ டிக் கொடுக்கப்படவில்லை. டுவிட்டரின் புதிய விதிகளின் படி கணக்குகளின் பெயர்களை மாற்றியதால் இருவரும் தங்களது ப்ளூ டிக்கை பறிக்கொடுத்துள்ளனர். 

    Leave A Comment