• Login / Register
  • சினிமா

    வெற்றிமாறனின் ஹீரோவாக பிரபல இயக்குனர்!

    வெற்றிமாறன் இயக்கத்தில் பிரபல இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்துவருவதாக திரைப்பட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும்போது அமீர் தெரிவித்துள்ளார்.

     எஸ்.ஆர் பிராபகரன் இயக்கத்தில், கலையரசன், வாணிபோஜன் இணைந்து நடித்துள்ள 'செங்களம்' இணைய தொடரின்  செய்தியாளர்  சந்திப்பில்  சிறப்பு விருந்தினர் இயக்குநர் அமீர் கலந்துகொண்டார். அதோடு  நாயகி வாணி போஜன், விஜி ராஜேந்திரன், இசையமைப்பாளர் தருண், இயக்குனர் ஏஸ்.ஆர் பிரபாகரன் உடப்பட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.

    விழாவில் பேசிய இயக்குநர் அமீர்,  நான் ரசித்தவர்களாகவும், என்னை ரசிப்பவர்களாகவும் மேடையில் உள்ளது சந்தோசம். நடிகர் சிவாஜியுடன் நேருக்கு நேர் பயப்படாமல் நடித்த ஒரு ஆள் என்றால்  விஜி சந்திரசேகராக தான் இருக்க முடியும். அழுத்தமான கதாபத்திரத்தில் நடித்தவர்.

    குடிமகன் என்ற படத்தை எடுக்க திட்டமிட்டபோது வாணிபோஜனை தான் நாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்தேன். ஆனால் அது நடக்காமல் போனது. மீண்டும் நடந்தால் உங்களை சந்திக்கிறேன்.

    ஜீ-5 ஓடிடி  தளத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில்  'நிலமெல்லாம் ரத்தம்' என்ற படத்தில் நான் நாயகனாக நடிக்கிறேன். சில ஆண்டுக்கு முன்பு ஒப்பந்தமானது வெற்றிமாறன் அவர் வேறு பணிகளில் பிஸி ஆகிவிட்டார். அதனால் அப்படியே உள்ளது.

    இந்த படத்தின் முன்னோட்டம் பார்க்கையில் நாம் இந்த படைப்பை விட்டுவிட்டோம் என தோன்றியது, ஒரு இயக்குநர் சக இயக்குநரை இப்படி தோன்ற வைத்தாலே வெற்றிதான். அந்த வகையில் இப்போதே இயக்குநர் வெற்றி பெற்றுவிட்டார். என்று கூறினார்.

    Leave A Comment