• Login / Register
  • சினிமா

    பொன்னியின் செல்வன் 2 : வெளியாகிறது முதல் பாடல் : தேதி அறிவிப்பு

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் முதல் பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான  ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருவதாகவும், இப்படத்தை வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில், 'அக நக’ என துவங்கும் அந்த முதல் பாடல் மார்ச் 20 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

    முதல் பாகத்திலேயே முழுக்க லாபத்தைப் பெற்ற இத்திரைப்படம் 2 ஆம் பாகத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.


    Leave A Comment