• Login / Register
  • சினிமா

    விஜய்யின் அம்மா விரும்பி பார்க்கும்; சீரியல்கள் எவை தெரியுமா?

    நடிகர் விஜய்யின் தயார் ஷோபா சந்திரசேகர் பாடகி, கதையாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

    சமீபத்தில் வெளியான  ஷோபா சந்திரசேகர் நேர்காணலில் தனக்கு பிடித்த தொலைக்காட்சித் தொடர் குறித்து அவர் மனம் திறந்துள்ளார். 

    அதில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' தொடர் தனக்கு மிகவும் பிடித்த தொடர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தொடர் நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பெண்களின் மேம்பாட்டை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. 

    இதே போன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்', 'பாக்கியலட்சுமி' ஆகிய தொடர்களையும் தொடர்ந்து பார்த்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

    எஸ்.ஏ. சந்திரசேகர் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் புதிய தொடரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
     
     

    Leave A Comment