• Login / Register
  • சினிமா

    நிலநடுக்கத்திலிருந்து உயிர் தப்பி ஆஸ்கர் வென்ற நடிககை!

    நேபாளத்தில் 9 ஆயிரம் பேரை பலியெடுத்த நிலநடுக்கத்திலிருந்து உயிர் தப்பிய நடிககை 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நேற்று காலை(இந்திய நேரப்படி) 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

    சிறந்த நடிகைக்கான விருது மலேசிய நடிகையான 60வயதான மிச்செல் இயோஹோவுக்கு கிடைத்தது. ‘எவிரிதிங் எவிரிவேர் ஆர் அட் ஒன்ஸ்’ திரைப்படத்திற்காக இந்த விருது கிடைத்தது. இந்தப் படம் பல்வேறு பிரிவுகளில் 7 விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ஆசியாவிலேயே முதன்முறையாக ஆஸ்கரில் சிறந்த நடிகை விருது பெற்ற நடிகை என்ற சாதனையை படைத்துள்ள மிச்செல் இயோஹோ நேபாள  நிலநடுக்கத்திலிருந்து உயிர்தப்பியவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    மிச்செல் யோவுக்கும் இந்தியாவிற்கும் இணைப்பு உள்ளது. இமயமலை முழுவதும் 1000 மடங்களுக்கு மேல் உள்ள இந்தியாவை தளமாகக் கொண்ட ட்ருக்பா அமைப்பின் ஆன்மீகத் தலைவரான புத்த மதத் தலைவர் கியால்வாங் ட்ருக்பா அவரது வாழ்க்கையின் 'பின்னணியில்' உள்ளார். 

    கியால்வாங் ட்ருக்பாயின் சீடரான மிச்செல் அவரது ஆலோசனையின் பேரில் நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹாலிவுட்டில் இருந்து தனது 'லைவ் டு லவ்' அறக்கட்டளைக்காக நிதி திரட்டினார்.



    2015இல் நடந்த நேபாள நிலநடுக்கத்தில் 9000 பேர் இறந்தனர். 21ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். அதிகபட்ச சேதாரமும் நிகழ்ந்தது. இந்த நிலநடுக்கத்தில் மிச்செல் இயோவும் அவரது கணவரும் சிக்கிக் கொண்டனர். பின்னர் அங்கிருந்து வெளியேறி மீண்டும் நேபாளம் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வளித்தார். 


    புத்த மதத்தின் மீது நம்பிக்கையுள்ளவர். ஐக்கியநாடுகள் முன்னேற்ற அமைப்புடன் சேர்ந்து தரமான சாலைகள் அமைக்க தொடர்ந்து பங்களித்து வருகிறார். இதன் நல்லெண்ண தூதுவராகவும் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஹெச்ஐவி நோயாளிகளுக்காகவும் பல வருடங்களாக போராடி வருகிறார். 


    இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு ஐஏஎன்எஸ்க்கு அளித்த பேட்டியில் மிச்செல், “நேபாள மக்களுக்கு இன்னமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியமான பங்கு எனக்கிருக்கிறது. என்ன நடந்ததோ அது உண்மை, மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிகமான வேலைகள் உள்ளது. எனது சிறந்த நடிப்பு இனிமேல்தான் வரும்” எனக் கூறியிருந்தார்.

    ஆஸ்கார் விருது வாங்கியப் பின், “பெண்களே, நீங்கள் எப்பொழுதும் உங்கள் சிறந்த காலத்தை கடந்துவிட்டீர்கள் என்று யாரும் சொல்லும்படி வைத்துக்கொள்ளாதீர்கள்" என மிச்செல் இயோஹோ கூறினார்.

    Leave A Comment