"சினிமா வாழ்க்கையில் முதல்முறையாக ... ": வைரலாகும் பிரியங்காவின் பேச்சு
பிரியங்கா சோப்ரா ஆங்கிலப் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் தொடர்ந்து நடித்துவருகிறார்,
அமேசான் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் சிட்டாடல் தொடரில் ப்ரியங்கா சோப்ரா, சமந்தா, ரிச்சார்ட் மேட்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரூஸோ சகோதரர்கள் இயக்கும் எபிசோடில் சமந்தா, வருண் தவானும் நடிக்கிறார்கள். பிரியங்கா சோப்ரா இந்த தொடரில் முதன்மை கதாபத்திரமாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமேசான் ஸ்டுடியோஸ் வழங்கும் சௌத் வெஸ்ட் திரைப்பட விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்றார். இதில் அவர் சம்பளம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்கா சோப்ரா பேசியதாவது:
நான் இதை சொல்வதால் எனக்கு பிரச்னை ஏற்படலாம். நான் சினிமாவில் 22 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். 70 திரைப்படங்கள் 2 டிவி தொடர்கள் நடித்துள்ளேன். ஆனால் சிட்டாடல் தொடர் நடிக்கும்போது மட்டுமே எனக்கு ஆண் நடிகர்களுக்கு சமமாக ஊதியம் கிடைத்துள்ளது. இது எனக்கு சிரிப்பாக இருக்கிறது ஆனால் இது ஒரு வகையில் பத்தியக்காரத்தனமானது. ஏனெனில் குறைவான சம்பளம் பெற்ற படத்திற்கும் சமமாக எனது உழைப்பினையும் நேரத்தினையும் கொடுக்கிறேன். அமேசான் நிறுவனம் என்னிடம் நீங்கள் இணை நடிகையாக நடித்துள்ளீர்கள் அதனால் இந்த சம்பளம் உங்களுக்கு பொருத்தமானது எனக் கூறினர். ஆமாம் இது சரியானதென நானும் கூறினேன். ஹாலிவுட்டில் இதுமாதிரி முடிவெடுக்கும் பெண்கள் சிலர் இருப்பதால் இது சாத்தியமாகிறது. இல்லையேல் இது சாத்தியமாகாது. என தெரிவித்துள்ளார்.
Leave A Comment