• Login / Register
  • சினிமா

    சர்ச்சையில் சிக்கிய லேடி காகா : ஆஸ்கார் மேடையை தவிர்க்கிறாரா?

    பிரபல பாப் இசை  பாடகி லேடி காகா ஆஸ்கார் விருது நிகழ்வை புறக்கணிப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

    பிரபல பாப் இசை  பாடகி லேடி காகா பாடிய பாடல் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. டாப் கன் மேவரிக் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை லேடி காகா பாடியிருந்தார். இந்தப்பாடலை சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதிற்குத் பரிந்துரை செய்திருந்தது.

    இந்த நிலையில் மார்ச் 13-ந் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க இருக்கும் விருது வழங்கும் விழா மேடையில் லேடி காகா கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. 

    லேடி காகா தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அதனால் ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பல கலைஞர்களின் கனவாக இருக்கும் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டும் லேடி காகா கலந்து கொள்ளாமல் தவிர்த்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

    Leave A Comment