“கோட் படத்தின் அப்டேட்” சொன்ன வெங்கட் பிரபு!
விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் துவங்க உள்ளதால் விரைவில் படக்குழு அங்கு செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ரசிகர் ஒருவர் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கோட் படத்தின் அப்டேட் சொல்லுங்கள் எனக் கேட்டிருந்தார். அதற்கு, வெங்கட் பிரபு “கோட் படத்தின் அப்டேட்” என அவர் கேட்டதையே கூறி கிண்டலடித்துள்ளார்.

Leave A Comment