• Login / Register
  • சினிமா

    வைல்டு கார்டு போட்டியாளர்களால் வெளியேறப்போகும் 3 போட்டியாளர்கள் யார்..?

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் இன்று வரவுள்ளதாக ப்ரோமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில் 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பிக் பாஸ் வீட்டிலிருந்து 14 போட்டியாளர்களுக்கும், 3 வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு நடைபெறவுள்ள போட்டியில் தோல்விபெறும் 3 பேர் பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் புதிதாக வருவார்களா அல்லது இந்த சீசனிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வருவார்களா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகும் 3 போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


    Leave A Comment