லியோ: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
லியோ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. இந்தப் படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், திரிஷா, கௌதம் வாசுதேவ், மிஷ்கின், பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.
செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

படம் வெளியான முதல்நாளிலேயே ரூ.148 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூலித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற நவ.24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave A Comment