• Login / Register
  • கட்டுரைகள்

    'சிங்களர்கள் இன்று போராடுவதற்கான அடிப்படையே தமிழர்கள் தான்'-தோழர் தியாகு

    தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, அவர்கள் 'டி என் மீடியா 24'ற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ஈழத்தமிழர்களுடைய வாழ்வுரிமையை மீட்டுருவாக்கம் செய்வது குறித்து விரிவாக கலந்துரையாடினார்.

    கடந்த 2009 முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடந்தேறிய பிறகு உலகத் தமிழர்களும், தாயகத் தமிழர்களும், தமிழகத்தின் தமிழர்களும் போராடி இன்று பல முன்னெடுப்புகளை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள்.

    உலக நாடுகளையும், ஐ. நா. வையும் ஈழத்தில் நடந்த இனஅழிப்பை பேச வைத்து இருக்கிறார்கள்.

    இலங்கையில் நடந்தது இன அழிப்பு தான் என்பதை உலக வல்லரசு நாடுகள் கூட ஒத்துக் கொள்ளவில்லை. இந்தியாவும் கூட ஒத்துக் கொள்ளவில்லை. 

    ஐ. நா.வின் முக்கிய அதிகாரியான சார்லஸ் பெட்ரிக், இலங்கையில் நடந்த இன அழிப்புக்கு ஐ. நா. தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

     “சாட்சிகள் அற்றப் போர் என ராஜபக்சே நடத்திய போரின் அன்றாட நிகழ்வுகள் அனைத்துமே, ஐ. நா. விற்கு செயற்கைக் கோள் படங்கள் மூலமாக தெரிவிக்கப்பட்டன.

    அத்தனை சாட்சியங்கள் கிடைத்தும் ஐக்கிய நாடுகள் சபை அமைதியாக இருந்தது என அவர் குற்றம் சாட்டியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. 


    ஐ. நா. சபையிடம், பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் நடந்த இன அழிப்பைப் பற்றிய பல அறிக்கைகள் உள்ளன. அவற்றை மூடி மறைத்து விட முடியாது. இவையெல்லாம் தமிழர்களும், உலகத் தமிழர்களும், தாயகத் தமிழர்களும் உலகெங்கும் நடத்திய போராட்டங்களின் வெளிப்பாடு தான்.

    சிங்களர்கள் இன்று போராடுவதற்கான அடிப்படையே தமிழர்களின் பல்வேறு காலகட்ட போராட்டங்கள் தான். 

    இலங்கையில் நடந்தது போர் குற்றம் தான் என்பதை விரைவில் பன்னாட்டு சமூகம் முன் நிரூபிப்போம். மத, மொழி, பெரும்பான்மைவாத அரசியல் செய்பவர்களுக்கு ராஜபக்சேவின் இன்றைய நிலை ஒரு பாடம்.

    மீண்டும் இப்போது முன்வைத்து பேசப்படும், '13 ஆவது திருத்தச் சட்டம்' என்பதே ஒரு மோசடி. வடக்கு கிழக்கு மாகாண பொறுப்பில் இருந்த பலர் இதை கடுமையாக சாடி உள்ளார்கள்.

    தமிழ்த் தேச அரசியல் என்பது ஒருவரை முதலமைச்சராக்குவது மட்டுமல்ல. பிரபாகரன் அவர்கள், தமிழர்கள் கையில் ஆட்சி, அதிகாரம் கிடைத்தால், நான் எந்த பதவியையும் பெற மாட்டேன். நான் நீண்ட போராட்டத்தை நிகழ்த்த பயணப்படுகிறேன். என்பது போல கூறினார்.


    நாம் தமிழர் செய்யும் அரசியலை நான் தமிழ்த் தேசிய அரசியலாக கருதவில்லை. 'வெகுசன அரசியல் கட்சிகள் பலவும், சமரசங்களுக்கு உட்பட்டு தான் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளார்கள். இயக்க அரசியல் என்பது வேறு, வெகுசன அரசியல் என்பது வேறு'.

    இவ்வாறாக தோழர் தியாகு அவர்கள் நமது ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.


    Leave A Comment