• Login / Register
  • கட்டுரைகள்

    சூரியனில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

    விண்வெளியில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது ஆராய்ச்சியாளர்களையே அசரவைப்பதுபோல சில சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டுள்ளன, சூரியனில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்தால், ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்துபோயுள்ளனர். 

    சூரியனின் மிகப்பெரிய துண்டு ஒன்று வெடித்து வெளியே சிதறியதாகவும், அது பார்க்க சூறாவளி போல தென்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சூரியனின் மிகப்பெரிய துண்டு ஒன்று வெடித்து வெளியே சிதறியதாகவும், அது பார்க்க சூறாவளி போல தென்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வெடித்துச் சிதறிய சூரியனின் பெரிய துண்டு வட துருவத்தில் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
     
    சூரியனின் ஒரு பகுதி வெடித்துச் சிதறியது தொடர்பான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பல ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சூரியனின் ஒரு பகுதி வெடித்து வட துருவத்தில் சிதறியது. 

    நாசாவின் தொலைநோக்கியில் பதிவான விடியோவை டாக்டர் தமிதா ஸ்கோவ் தனது டிவிட்டரில் வெளியிட்டார் அது தற்போது வைரலாகியிருக்கிறது.  

    வழக்கமாக சூரியனிலிருந்து சூரியத் துண்டுகள் வெடித்துச் சிதறுவது நிகழும்தான். ஆனால், இது மிகப்பெரியதாக இருந்ததும், இதனால் சில நேரங்களில் பூமியின் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    Leave A Comment