• Login / Register
  • கட்டுரைகள்

    சூரியனில் ராட்சத 'துளை'; நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியம்

    சூரியனில் ராட்சத துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள். இந்த துளை புதிதாக தோன்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இந்தத் துளையை கரோனல் துளைகள் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த துளை பூமியை விட 30 மடங்கு அளவு பெரியது என்றும் கூறப்படுகிறது.

    இந்த துளை குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறும்போது, “இந்த துளை காரணமாக வெள்ளிக்கிழமைக்குள் பூமியை நோக்கி 1.8 மில்லியன் அளவு சூரியக் காற்று வந்தடையும். இதனை தெற்காசிய நாடுகள். ஆஸ்திரேலியா. நியூசிலாந்து ஆகிய நாடுகள் உணரலாம். இந்த வெடிப்புகளிலிருந்து வெளியேறும் வெப்பக் கதிர்கள் ரேடியோ தகவல் தொடர்புகள். விண்கலம். விண்வெளி வீரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். மேலும். இந்தத் துளையின் மூலம் பூமியின் மேற்பரப்பில் இன்னும் கூடுதல் இடங்களில் துருவ ஒளிகள் தோன்றலாம்” என்றனர்.

    சூரியனில் ஏற்படும் இந்த கரோனல் துளைகள் மிகவும் பொதுவானவை. ஆனால். அவை பெரும்பாலும் சூரியனின் துருவங்களை நோக்கி தோன்றும். அங்கு அவற்றின் சூரிய காற்று விண்வெளியில் வீசப்படும். ஆனால் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சூரியனில் ஏற்படும் மாறுதலுக்கு சூரியன் தயாராகி வருவதால். இந்தத் துளைகள் சூரியனின் பூமத்திய ரேகைக்கு அருகில் தோன்றும் வாய்ப்புகள் அதிகம் என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் பேராசிரியர் மேத்யூ ஓவன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

    Leave A Comment