எச்.3 என்.2 வைரஸ் : மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பிரபல நிறுவனம்
இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து எச்.3 என்.2 என்ற புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவியபடி உள்ளது.
காய்ச்சல்இ இருமலை உருவாக்கும் இந்த வைரஸ் சுமார் ஒரு மாதம் மக்களை படாதபாடுபடுத்தி விடுகிறது.
இந்த புதிய வகை வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. விரைவில் இந்த மருந்து பற்றி முழு விவரங்களும் வெளியிடப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வைரஸ்கள் கொரோனா வைரசின் திரிபு வைரசான ஒமைக்ரான் வைரசின் புதிய பகுதியாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது.
அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் இன்புளூயன்சா வகை வைரஸ்கள் தான் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இன்புளூயன்சா வைரஸ்களில் பல வகைகள் உள்ளன. அதில் எச்.3 என்.2 மற்றும் எச்.1 என்.1 வகையை சேர்ந்த வைரஸ்கள்தான் அதிகம் பரவி இருப்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்தது.
சில மாநிலங்களில் அடினோ வைரஸ் என்ற வகை வைரசும் தீவிரமாக பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வைரஸ்கள் அனைத்தும் இன்புளூயன்சா வைரசின் ஏ வகை பிரிவை சேர்ந்தவை ஆகும். இந்த வைரஸ்கள் பெரும்பாலும் சிறுவர்களையும், முதியவர்களையும் பாதித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave A Comment