சென்னையை ஆட்டிபடைக்கும் வைரஸ் காய்ச்சல் : மருத்துவர்கள் எச்சரிக்கை
நிலவும் பனிக்காலத்தில் சென்னை வாழ் மக்களை பாதிக்கு வைரஸ் காய்ச்சல் ஒன்று தீவிரமாக பரவிவருகின்றது.
சளி மற்றும் வரட்டு இருமலில் தொடங்கும் இந்த காய்ச்சல் கடுமையான உடல் வலியையும் கை, கால் , மூட்டு வலி போன்றவற்றை தருகிறது.
அதிகாலையில் அதிக அளவிலான பனிப்பொழிவு இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கொசுக்கள் மூலமாக டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல் பரவும் நிலையில் புழு வைரஸ் என்ற புதுவித வைரஸ் தொற்றும் பரவி மக்களை காய்ச்சலில் தள்ளிக் கொண்டிருக்கிறது.
சென்னை மட்டுமன்றி புறநகர் பகுதிகளிலும் இந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது.
கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தினமும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சராசரியாக முப்பது பேர் வரை வந்து செல்வதாக மருத்துவர்களை கூறியுள்ளனர். இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகிறது.
இந்த காய்ச்சல் தொடர்பாக மருத்துவர்கள் கூறும் போது வீட்டில் ஒருவருக்கு வந்துவிட்டால் அடுத்தடுத்து அனைவரையும் முடக்கி போடும் வகையில் இந்த வைரஸ் காய்ச்சல் வீரியமாக உள்ளது என்று தெரிவித்தனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீடுகளில் இருந்து இருமும் போது துணியால் மூடிக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் உடனே வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் சளி பாதிப்பு ஏற்பட்டு காய்ச்சலில் கொண்டு போய் விட்டு விடும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இந்த காய்ச்சல் சரியாவதற்கு 15 நாட்கள் வரை ஆகிறது. இந்த 15 நாட்களும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு உடல் சோர்வை சந்திக்க நேரிடுகிறது. மூக்கடைப்பு ஏற்பட்டு சுவாசிப்பதற்கும் சிரமமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்த சளித்தொல்லை சிலருக்கு அதிகமாகி நுரையீரலில் போய் சளி கெட்டியாக தேங்கி விடுகிறது. இது இரவு நேரத்தில் தூக்கத்தையும் கெடுத்து விடுகிறது. இது போன்ற நேரங்களில் நெபுலேசர் வழியாக மருந்தை செலுத்தி சளியை கரைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
காய்ச்சல் பாதிப்பு அதிகமாகும் போது, சிலருக்கு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் திடீரென குறைந்து விடுகிறது. இது போன்ற பாதிப்புக்குள்ளாகும் நபர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. எனவே லேசான சளி தொல்லை மற்றும் இருமல் ஏற்படும் போதே மருத்துவர்களிடம் சென்று உடலை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.
Leave A Comment