• Login / Register
  • கட்டுரைகள்

    காபியால் குழந்தைகளின் மனநிலையில் பாதிப்புகள் ஏற்படலாம் : மருத்துவர்கள் எச்சரிக்கை

    12 வயதுக்கும் குறைந்த சிறாருக்கு காபி மற்றும் காஃபின் கலந்த பானங்கள்  உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பொது மருத்துவ நிபுணர் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் கூறும்போது:

    அண்மைக் காலமாக குழந்தைகள் காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட புத்துணர்ச்சி பானங்கள் போன்றவற்றிற்க்கு  அடிமையாகி உள்ளனர்.

    காஃபின் என்பது காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட புத்துணர்ச்சி பானங்கள் போன்றவற்றில் காணப்படும் ஒரு பொதுவான மூலப்பொருள் ஆகும். இது உலகளவில் அதிகப்படியான மக்கள் விரும்பி அருந்தும் பானங்களில் இரண்டறக் கலந்துள்ளது.

    பொதுவாக காஃபின் மூலப்பொருளானது ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், முறையான உறக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    காஃபின் காரணமாக குழந்தைகள் சரியாக தூங்கவில்லை என்றால் அவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். அதுமட்டுமல்லாது குழந்தைகளுக்கு கவனச் சிதறல் மற்றும் மன நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

    இது அவர்களது கல்வியை பாதிக்கக்கூடும். குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட சிறாருக்கு காஃபின் பானங்கள் ஆபத்தானவை.

    எனவே, அவற்றைத் தவிர்த்து பழச்சாறு, ஊட்டச்சத்து பானங்கள், இளநீர், பால், மூலிகை தேநீர் போன்றவற்றை அருந்தலாம் என்றார் அவர்.

    Leave A Comment