திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? - ஐசிஎம்ஆர் என்ன சொல்கிறது..?
இந்தியாவில் நாளுக்கு நாள் இளைஞர்களின் திடீர் மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் இதற்க்கு கொரோனா தடுப்பூசிதான் காரணம் என்ற வகையில் பரவலாக பேசப்பட்டது.
குறித்த விடையம் தொடர்பில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் அதிகரித்துள்ள இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்றுதெரியவந்துள்ளது.
மாறாக புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்துதல், போதைப் பழக்கம் போன்ற காரணிகளால் தான் இந்திய இளையர்களின் திடீர் மரணத்துக்கு காரணமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புக்குப் பிறகு இந்திய இளைஞர்களின் காரணமில்லா இறப்புகளின் அறிக்கைகளைக் கொண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வு, இந்தியா முழுவதும் உள்ள 47 மருத்துவமனைகளில் இருந்து 18-45 வயதுடைய 729 நபர்களின் இறப்பு தொடர்புடைய காரணிகளை அடிப்படையாக நடத்தப்பட்டது.
ஆய்வின் முடிவில் கொரோன தடுப்பூசியானது, இந்தியாவில் உள்ள இளம் வயதினரின் காரணமில்லாத திடீர் மரணத்தின் அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
மாற்றாக, "வாழ்க்கை முறை, குடும்ப உடல்நல வரலாறு போன்ற காரணங்களால் இளம் வயதினரின் திடீர் மரணத்தின் வாய்ப்பை அதிகரித்தன" என்று அவர்கள் அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவித்தனர்.
மேலும், இளம் வயதினரின் காரணமில்லா திடீர் மரணத்தின் அபாயத்தை கொரோனா தடுப்பூசி குறைத்துள்ளது என்பதை தற்போதைய ஆய்வு நிரூபிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave A Comment